
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் சீனியர் மணவரை முதலாம் ஆண்டு மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனியர் மாணவர் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் அறைக்குள் சென்று பணத்தை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சீனியர் மாணவரை மண்டியிட்டு கையை தூக்க சொல்லி முதலாம் ஆண்டு மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனை பார்த்த சக மாணவர்கள் சீனியர் மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதுகுறித்து அறிந்த கல்லூரி நிர்வாகம் 13 மாணவர்களை சஸ்பெண்ட் செய்தது. மேலும் நாளை கல்லூரிக்கு பெற்றோர்களுடன் தான் வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.