தெலுங்கானா மாநிலத்தில் அரசு பள்ளி  செயல்பட்டு வருகிறது.‌ இங்கு சிரிஷா என்பவர் ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் அவர்களது முடியை ஒழுங்காக வெட்டி வருமாறு அடிக்கடி கூறியுள்ளார். ஆனால் மாணவர்கள் ஆசிரியர் கூறியதை கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஆசிரியர் ஒருகட்டத்தில் மாணவர்களின் முடியை அவரே கத்திரிகோலால் வேட்டினர். மொத்தம் 10 மாணவர்களுக்கு இதுபோன்று ஆசிரியர் அவர்களது தலைமுடியை வெட்டியுள்ளார்.

இதைப்பார்த்த அவர்களது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பெற்றோர்கள் அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் சமாதானம் பேசியதுடன் அவர்களை வீட்டிற்கு செல்லுமாறு கூறினார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர் மாணவர்களுக்கு தலைமுடியை வெட்டிய ஆசிரியரை சஸ்பெண்ட் செய்யுமாறு உத்தரவிவிட்டுள்ளார்.