
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் வீடு கட்டுவதற்காக மணல் அள்ளிய போது ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பத்மநாபம்பேட்டையில் வசிக்கும் லட்சுமி என்பவர் கட்டி வரும் புதிய வீட்டிற்காக மணல் கொட்டப்பட்டு இருந்தது. இன்று கட்டிட தொழிலாளர்கள் மணலை அள்ளிக்கொண்டிருந்தபோது, அதில் ஒரு ஆண் சடலம் கிடந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். லட்சுமி அளித்த புகாரின் பேரில் உடலை கைப்பற்றிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.