
திருவண்ணாமலை மாவட்டம் நவாப் பாளையம் ஊராட்சி மிருகண்டா நதி அணையின் அருகே செங்கல் சூளை ஒன்று உள்ளது. அங்கு மண் கடத்தப்படுவதாக காவல் நிலையத்திற்கு புகார் வந்தது.
அந்த புகாரின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் நாகராஜன் செங்கல் சூளைக்கு சென்றுள்ளார். அப்போது போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்த கடத்தல்காரர்கள் கடத்தலுக்கு உபயோகித்த டிராக்டர்களை எடுத்துவிட்டு தப்பியுள்ளனர்.
ஆனால் மூன்று டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரத்தை போலீசார் பிடித்தனர். பின்பு இயந்திரங்களை நாகராஜன் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட போது அந்த கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் குமரன் நடராஜனை வழிமறித்துள்ளார்.
மேலும் இங்கு எடுக்கும் மண்ணை கோவிலுக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார். அதனால் குமரனுக்கும் நாகராஜனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதனை அறிந்த ஆதமங்கலம்புதூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கறிஞர் குமாரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மண்க் கடத்தலுக்கு உபயோகித்த மூன்று டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையே காயமடைந்த நாகராஜனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் குமரன் காவல் ஆய்வாளர் நந்தினியின் கணவர் என்பது தெரிய வந்தது. காவல் ஆய்வாளர் தாக்கப்பட்ட காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.