
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த சனிக்கிழமை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் திருச்செந்தூரிலும் கொண்டாடப்பட்டது. அங்கிருந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக நீர்நிலைகளில் கரைப்பதற்காக எடுத்துச் சென்றனர்.
அப்போது விநாயகர் சிலை ஊர்வலம் காயல்பட்டினம் வழியாக சென்றது. அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு குளிர்பானம் வழங்கினர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகும் நிலையில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே உள்ள ஒற்றுமை உணர்வை காட்டுகிறது.