
மதுரை உசிலம்பட்டி அருகே பட்டியல் இன சிறுவன் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவில் திருவிழாவில் வேட்டி கட்டி ஆடியதற்காக சிறுவனை ஜாதி பெயர் சொல்லி துன்புறுத்தியதாகவும் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 17 வயது சிறுவனை அடித்து துன்புறுத்தி காலில் விழ வைத்ததாக கூறப்படும் நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவத்திற்கு கன்னடம் தெரிவித்து நீலம் பண்பாட்டு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது
இது வடமாநில அல்ல நம் தமிழ்நாட்டில் உசிலம்பட்டியில் ஒரு சிறுவனுக்கு நடந்த அவலம்.
இதற்கு நம் தமிழக முதல்வர் என்ன சொல்ல போகிறார் @CMOTamilnadu . சமூகநீதி பேசும் திராவிட மாடல் ஆட்சியில் இத்தகைய ஒரு கொடுர சம்பவம் முதல்வருக்கு அவமானம் இல்லையா??@arivalayam @thirumaofficial… pic.twitter.com/nNSUyAcmt2
— Sangeetha -TVK✨ (@sangeet29332013) January 19, 2025
#Dalitlivesmatter @mducollector pic.twitter.com/PyUspoOhXl
— நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) January 19, 2025