
புதுக்கோட்டையில் அண்ணா சிலைக்கு பாதுகாப்பாக இரும்பு கம்பியாலான கூண்டு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் கூண்டில் ஏறி மது அருந்திய ஒருவர் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்பு அவரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர்.
இருப்பினும் அந்த போதை ஆசாமி கீழ இறங்க மறுத்துள்ளார். இதனால் காவல்துறையினர் அருகிலுள்ளவர்களின் உதவியோடு அவரை கீழே இறக்க முயன்றனர். அப்போது அவர் எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்ததார். இதனால் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த போதை ஆசாமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்பு அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
அதன்பின் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தை பற்றி அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தோத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் தன் கிராமத்தில் அடிப்படை வசதி இல்லாததால் தான் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார்.