கன்னியாகுமரி மாவட்டம் களியல் என்னும் பகுதி உள்ளது. இங்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் பள்ளி வாகனம் ஒன்று அவ்வழியே வந்தது.  அந்த வாகனத்தை காவல்துறையினர் சோதனை செய்வதற்காக நிறுத்தினர். அப்போது வாகன ஓட்டுநர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் இவரது பெயர் ரதீஷ்குமார் (38) எனவும் அவர் பேச்சிப்பாறையைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. அதோடு அவர் மது போதையில் வாகனத்தை ஓட்டிவந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் ரதீஷ்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் இதுகுறித்த தகவலை காவல்துறையினர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்ததுடன் பள்ளி வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.