
ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ்குமாருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தொலைபேசி மூலமாக உரையாடியுள்ளார். அப்போது இந்தியா கூட்டணியில் இணைந்து கொள்ள நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் சரத் பவார். சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் இருவரையும் இணைத்துக் கொண்டு ஆட்சி அமைக்க இந்தியா கூட்டணி திட்டமிடுகிறது