
பெண்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். பெண்களுடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டு புதுப்புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் பெண்களுக்கு மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்ற சிறு சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
குறுகிய காலத்திற்கான இந்த திட்டத்தில் வருடத்திற்கு 7.5 சதவீதம் வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பெண்கள் அல்லது பெண் குழந்தைகள் ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இதனுடைய முதிர்வு காலம் இரண்டு வருடங்கள். மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்கள்,. பொதுத்துறை வங்கிகளை அணுகலாம்