மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மார்ச் மாதம் மகிழ்ச்சியான மாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த மாதம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து சில பரிசுகள், அகவிலைப்படி உயர்வு ஆகியவை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. 2025 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு மூன்று சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மார்ச் 10-ம் தேதிக்குள் அகவிலைப்படி உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அகவிலைப்படி உயர்வுக்கான தேதியை இன்னும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் ஹோலி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படியை மத்திய அரசு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 53% பெறுகிறார்கள்.  ஒருவேளை இனி அகவிலைப்படி மூன்று சதவீதம் உயர்ந்தால் மொத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 56 சதவீதமாக அதிகரிக்கும். இதற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள். அகவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.