
மத்திய அரசின் நிறுவனங்களில் பணி செய்து கொண்டு உறுப்பு தானம் செய்ய விரும்பும் நபர்களுக்கு சிகிச்சையின் போது 42 நாட்கள் சிறப்பு விடுமுறை எடுக்க உரிமை உண்டு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது நீங்கள் யாருக்காவது கிட்னி கொடுக்க வேண்டும் என்றால் மெடிக்கல் லீவ் எடுக்காமல் 42 நாட்கள் கேஸ்வல் லீவ் சம்பளத்துடன் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சிலருக்கு மட்டுமே இந்த விடுமுறை அளிக்கப்படும்.
எல்லாவிதமான ஊழியர்களுக்கும் இந்த விடுமுறை விதிகள் பொருந்தாது. அதனைப் போலவே ரயில்வே ஊழியர்கள் மற்றும் இந்திய சேவை ஊழியர்களுக்கு இந்த விதி பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 42 நாட்கள் விடுமுறை மெடிக்கல் லீவ் அல்லாமல் அவசர தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உடல் உறுப்பு கொடையாளர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து குணமாக ஏதுவாக முப்பது நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 42 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த விடுப்பை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.