2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக ஜூலை மாதத்திலேயே மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகும் என கூறப்படுகிறது.

மத்திய பட்ஜெட்டில் 8வது ஊதிய குழுவை அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 8வது ஊதிய குழு அமலுக்கு வந்தால் ஊழியர்களின் ஊதிய முறையில் பல மாற்றங்கள் ஏற்படும். அடிப்படை ஊதியம், தினப்படி, ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.