ஜம்மு காஷ்மீரின் பாஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மத்திய அரசு பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி வாகா எல்லை மூடல் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, காஷ்மீர் தாக்குதலில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். காஷ்மீர் போன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெறாது என உறுதி அளிக்கிறேன்.

தமிழ்நாட்டில் பயங்கரவாதம் இருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறினார். தமிழ்நாட்டுக்குள் எந்த ரூபத்திலும் மதவாதம் உள்ளே நுழைய முடியாது. மத பயங்கரவாதம் எங்கு உள்ளது என்று கூறுங்கள்.

பொத்தாம் பொதுவாக கூறக்கூடாது. கோவையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் என்ன நடக்கிறது என உங்களுக்கே தெரியும் என மு.க ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.