மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தக் லைப் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் திரிஷா, சிம்பு, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தக் லைப் திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 5 திரைப்படம் ரிலீஸ் ஆகும் என பட குழு அறிவித்தது.

இந்த நிலையில் தக் லைப் திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிங்குச்சா என்ற பாடல் இன்று வெளியாகும் என பட குழு ஏற்கனவே அறிவித்தது. அந்த பாடல் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். சற்று முன் ஜிங்குச்சா பாடல் ரிலீஸ் ஆகி உள்ளது.