சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் அருகே இருக்கும் மருதீஸ்வரர் கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த பழனி என்ற நபர் உயிரிழந்தார் . நேற்று முன் தினம் மாலை திருவான்மியூரில் உள்ள மருதீஸ்வரர் கோவிலின் கோபுரத்தின் மீது ஏறி பணியாற்றி கொண்டிருந்தபொழுது கால் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

பழனிக்கு பின்னந்தலையில் பலத்த காயமடைந்த நிலையில் அங்கிருந்த கோவில் நிர்வாகிகள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக  கூறினர்.