
உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியை சேர்ந்த ராகேஷ் குமார் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். ராக்கேஷ் குமாருக்கு தனது மனைவியின் சுபாவத்தை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று தோன்றியுள்ளது.
இதனால் புதிதாக இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை தயார் செய்து தனது மனைவிக்கு அசிங்கமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். ஆனால் இது அவருக்கே ஆபத்தாக அமைந்துள்ளது.
ராகேஷ் குமாரின் மனைவி தனக்கு தெரியாது நபர் தவறாக மெசேஜ் அனுப்புவதாகவும் பிளாக் செய்தாலும் வெவ்வேறு ஐடிகளில் இருந்து மெசேஜ் வருவதாக புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் ராகேஷ் குமார் செய்த செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் ராகேஷ் குமாரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.