
சேலம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி முன்சீப் தோட்டத்தில் பெரியசாமி(94) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி ஜெகதாம்பாள்(87). இந்த தம்பதிக்கு மதிவாணன் திரவியம் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வயது முதிர்வு காரணமாக ஜெகதாம்பாள் உயிரிழந்தார்.
இதனால் மனைவி உடல் அருகே சோகமாக அமர்ந்திருந்த பெரியசாமியும் துக்கம் தாங்காமல் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் உறவினர்கள் கணவன் மனைவியின் உடல்களை ஒரே இடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.