கேரள மாநிலத்தில் அன்னக்குட்டி (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜின்ஸ் என்ற மகனும், பிரின்சி என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் ஜின்சுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதில் லியா என்ற  மகள் இருக்கிறார். அதன்பிறகு பிரின்சிக்கு திருமணமான நிலையில் சந்தோஷ் (50) என்ற கணவரும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் சந்தோஷ் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். பிரின்சி ஜெர்மனியில் செவிலியர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் வாங்கும் சம்பளத்தில் சிறு பகுதியை தன் கணவருக்கு அனுப்பிவிட்டு மீதத்தை தன் மகளின் எதிர்காலம் கருதி தாயாருக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் சந்தோஷ் தன் மனைவியின் முழு சம்பளமும் வேண்டும் எனக் கூறி மாமியார் மற்றும் மைத்துனரிடம் அடிக்கடி தகறாறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் கடந்த 5-ம் தேதி அன்னகுட்டி மற்றும் குழந்தை லியா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தோஷத்தை தேடி வந்த நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு மாமியார் மற்றும் மைத்துனரின் வீடுகளை தீ வைத்து எரித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் ஜின்சின் வீடு முழுமையாக எரிந்த நிலையில் அன்ன குட்டியின் வீடு பாதி அளவு எரிந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர தேர்தல் வேட்டை நடத்தி வந்த நிலையில் நேற்று சந்தோஷ் பிடிபட்டார். மேலும் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.