
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜா(32). இவரது மனைவி ராமலட்சுமி(25). கடந்த 2021-ஆம் ஆண்டு அழகுராஜா பெரிய குளத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு ராமலட்சுமி உடந்தையாக இருந்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அழகுராஜா, ராமலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம் அழகுராஜாவுக்கும் ராமலட்சுமிக்கும் தலா 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.