ராமநாதபுரம் மாவட்டம் கவரங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமதாஸ் – ரஞ்சிதா தம்பதி. ஆறு வருடங்களுக்கு முன்பு இத்தம்பதிக்கு திருமணம் முடிந்த நிலையில் இரண்டு மகன்கள் உள்ளனர். ராமதாஸ் அடிக்கடி மது போதையில் வீட்டிற்கு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகம் பட்டு சண்டையிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று எப்போதும் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் ரஞ்சிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகறாரு செய்துள்ளார். பின்னர் அனைவரும் உறங்கிய நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் எழுந்த ராமதாஸ் சுத்தியலால் ரஞ்சிதாவின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்து அவர் அலறிய சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ரஞ்சிதாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராமதாஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.