திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு மீனவன்குளம் நேரு தெருவில் கூலி வேலை பார்க்கும் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு குடும்ப செலவுக்காக கீழதுவரைகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் 50,000 ரூபாய் கடன் வாங்கினார். அதற்கு மாதம் தோறும் 2500 ரூபாய் வட்டி செலுத்தி வந்தார். இந்த மாதம் வட்டி செலுத்தாததால் அந்த பெண் இசக்கியின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி எஸ்தர் மரியாவை அவதூறாக பேசினார். இதுகுறித்து எஸ்தர் மரியா தனது கணவரிடம் தெரிவித்தார்.
உடனே இசக்கி அந்த பெண்ணை தட்டி கேட்டபோது மீண்டும் அந்த பெண் இசக்கியின் மனைவியை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து இசக்கி களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் மன உளைச்சலில் இசக்கி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்