கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பட்ட வார பள்ளி கிராமத்தில் அண்ணன் தம்பிகளான ஸ்ரீராம் (40), முனீந்திரா (38) ஆகியோர் வசித்து வந்தனர். இதில் முடிந்ததாவுக்கு வசந்தா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக முனீந்திரா தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அண்ணன் தம்பி இருவரும் மது குடித்தனர். அப்போது சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.

அதில் கோபமடைந்து ஸ்ரீ ராம் தனது தம்பியை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதனால் படுகாயமடைந்த முனீந்திரா போதையில் வீட்டிற்கு சென்று படுத்து விட்டார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது முனீந்திரா இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்ரீராமை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.