கர்நாடகாவில் பெண் ஒருவர்  கருத்துவேறுபாடு காரணமாக தன் கணவரை பிரிந்த நிலையில் ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி கருத்துகளை தெரிவித்துள்ளது. ‘அதாவது மனைவி வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டு கணவனிடம் இருந்து முழு பராமரிப்பையும் பெற முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி பெண்கள், தங்கள் வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்ய சில முயற்சி செய்ய வேண்டும்’ என நீதிபதி தெரிவித்தார். மேலும், மனைவிக்கு ஜீவனாம்சத்தை 10,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக குறைத்தது நீதிமன்றம்.