பிரபல யூடியூபர் இர்பான். இவர் அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பத்தில் ஆண் குழந்தை இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். ஏனெனில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவது குற்றமாக கருதப்படும் நிலையில் அதனை அறிந்து கொண்டு அதனை பொதுவெளியில் அவர் youtube இல் வீடியோவாக வெளியிட்டார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் பின்னர் இர்பான் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் இர்பானின் மனைவிக்கு தற்போது மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில் குழந்தையின் தொப்புள் கொடியை அவர் கத்திரிக்கோலால் வெட்டியுள்ளார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் இர்பானுக்கு மருத்துவமனை நிர்வாகம் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது அமைச்சர் மா சுப்பிரமணியன் இர்ஃபான் இந்த விவகாரத்திற்கு மன்னிப்பு கேட்டிருந்தாலும் அவரை கண்டிப்பாக சும்மா விட முடியாது என்று கூறியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் கூறும் போது அறுவை சிகிச்சை ரூபம் சென்று குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியது சட்டப்படி குற்றம். இது மருத்துவ விதிகளுக்கு எதிரானது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்டாலும் அவரை சும்மா விட முடியாது. அவரை அறுவை சிகிச்சை அரங்கத்திற்குள் அனுமதித்த டாக்டர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் கண்டிப்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி கொடுத்துள்ளார்.