கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சீ பிரதீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 42 வயது ஆகும் நிலையில் ஹோட்டல் ஆலோசகராகவும் தொழிலதிபராகவும் இருந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய காரில் முட்டின பாலையா பகுதிக்கு சென்றார். அங்கு மரங்களுக்கு நடுவில் காரை நிறுத்தி உள்ளார். அப்போது  திடீரென காரில் கரும்புகை வெளியேறிய  நிலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்த நிலையில் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து சிலர் கார் கண்ணாடியை உடைத்து தீயை அணைத்து அவரை மீட்டனர். அப்போது அவர் மூச்சு திணறி உயிரிழந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.