திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் அருகே இருக்கும் மரத்தில் திடீரென தண்ணீர் வடிந்தது. வெள்ளகோவில் மூலனூர் சாலையில் ஒரு மரம் இருக்கிறது. சுமார் எட்டு வயதுடைய அந்த மரத்திலிருந்து ஆழமான ஆணிகள் அடித்து விளம்பர போது வைத்திருந்தனர். அதனை பார்த்த தன்னார்வ அமைப்பினர் அந்த ஆணிகளை அகற்றி உள்ளனர்.

ஒரு ஆணியை அகற்றிய பிறகு அந்த துளையிலிருந்து சுமார் அரை மணி நேரம் தண்ணீர் வடித்து கொண்டே இருந்தது. அதனை அந்த பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். அந்த மரத்திலிருந்து வடிந்தது தண்ணீராக தெரியவில்லை அதன் கண்ணீர் போல இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சாலையோர மரங்களில் ஆணிகள் அடிப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.