
நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் சந்தித்த நிலையில் அவரிடம் இது பற்றி கேட்டபோது அரசியல் மற்றும் திரைப்பயணம் குறித்து பல்வேறு விஷயங்களை பேசியதாக கூறினார். நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் அது சீமானுக்கு பின்னடைவாக பார்க்கப்படுவதால் அவர் ரஜினியை சந்தித்ததாகவும் அதன் மூலம் ரஜினி ரசிகர்களை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்வதாகவும் தகவல்கள் வெளிவருகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த் மற்றும் சீமான் சந்தித்த புகைப்படத்தை சாட்டை துரைமுருகன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு சாட்டை துரைமுருகன் ஒரு எக்ஸ் பதிவில் ரஜினி மெண்டல் என்று பதிவிட்டு இருந்தார். மேலும் இந்த பதிவை தற்போது நெட்டிசன்கள் வைரலாகி இதுதான் உங்களுடைய மரியாதையா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த அளவு மரியாதையாவா??@Saattaidurai https://t.co/OvCk9FT7QU pic.twitter.com/3T5a3zyxYk
— priya (@PriyankaSmile01) November 21, 2024