
நடிகர் யோகி பாபு தற்போது சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய “கோலமாவு கோகிலா” படத்தில் இவருடைய நடிப்பு பட்டி தொட்டி எங்கும் பரவியது. அஸ்வின் இயக்கத்தில் மண்டேலா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு போட், தி கோட் படத்தில் நடித்தார். தற்போது கோவை ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார்கள். இதில் மாதவன் ஹீரோவாகவும் யோகி பாபு முக்கிய ரோலிலும் நடிக்க உள்ளார்.
இதற்கான படப்பிடிப்பு இரண்டு நாட்கள் கோவையில் நடைபெற உள்ள நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த யோகி பாபு மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். விசேஷ பூஜையான அர்த்த ஜாம பூஜையில் கலந்து கொண்டார். இதனையடுத்து தான் கொண்டு வந்த புதிய படப்பிடிப்பின் கதை கோப்புகளை சாமி பாதத்தில் வைத்து வணங்கி பெற்றுக் கொண்டார்.