
கொல்கத்தாவின் சீல்டாவில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் தரைத்தளத்தில் உள்ள ஏசியில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
தீயை கட்டுப்படுத்த 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கரத்தை விபத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) நோயாளி ஒருவர் புகையை சுவாசித்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.
மாவட்ட தீயணைப்பு அதிகாரியான டி.கே.தத்தா இந்தச் சம்பவத்தை பற்றி கூறும் போது மிகப்பெரிய தீ விபத்து என்றும் அனைத்து நோயாளிகளும் 20 நிமிடங்களில் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேற்கு வங்க தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் அமைச்சர் சுஜித் போஸும் மருத்துவமனைக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார். மீட்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டதால் பெரும் பேரழிவைத் தவிர்க்க முடிந்தது என கூறியுள்ளார்.