
2024-25 ஆம் கல்வி ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை காண விண்ணப்பங்கள் இணைய வழியில் இன்று முதல் தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜூலை 31 இன்று தொடங்கி வருகின்ற ஆகஸ்ட் எட்டாம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்ப பதிவு நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் http://medicalselection.org என்ற இணையதளம் மூலமாக தங்களது விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.