கோவாவில் உள்ள அபோட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் செரிமானம் மற்றும் வாயு கோளாறுகளுக்கான மருந்தான டைஜின் ஜெல்லை அந்த நிறுவனம் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. Digene Gel Mint பாட்டில் மருந்து குறித்து வாடிக்கையாளர்கள் புகார் அறிவித்தனர். இதனால் இந்த மருந்து தயாரிப்பை தானாக முன்வந்து திரும்பப் பெறுவதாக அந்த நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு தெரிவித்துள்ளது.