உத்திரப்பிரதேசம் மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் பர்ஸோவ்ஜா கிராமத்தை சேர்ந்த 51 வயது நபர் தனது மனைவி, 5 குழந்தைகளுடன் வசித்து வந்தார். சமீபத்தில், அவரது மனைவிக்கு அதே கிராமத்தில் மருமகன் உறவுமுறை கொண்ட நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்த நிலையில், இவர்களது உறவு குறித்து ஊரில் சந்தேகம் எழ தொடங்கியது.

இந்த நிலையில், மூத்த மகளின் திருமணத்துக்காக சேமித்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு, அந்த மருமகன் உறவுமுறை நபருடன் மனைவி ஒளிந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இது குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த, கணவர் நேரடியாக பஹாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தனது பிள்ளைகளுடன் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளா.