பம்பாய் உயர்நீதிமன்றம் கணவன் குடும்பத்தார் துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட மருமகள் வழக்கில் அவர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட தண்டனையை தற்போது ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பெற்றோர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு விசாரணை நீதிமன்றத்தில் கணவன் குடும்பத்தார் கொடுமைப்படுத்தியதால் தங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறி வழக்கு தொடர்ந்தனர்.

அதாவது தங்கள் மகளின் தனிப்பட்ட சுதந்திரத்தை அவர்கள் பறித்ததாக குற்றம் சாட்டினர். குறிப்பாக டிவி பார்க்கக்கூடாது, கோவிலுக்கு தனியாக போகக்கூடாது, பக்கத்து வீடுகளுக்கு தனியாக செல்லக்கூடாது, தனியாக கம்பளத்தின் மேல் படுத்து தூங்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை தங்கள் மகளுக்கு விதித்ததாகவும் அதனால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இந்த வழக்கு விசாரணைக்கு பெண்ணின் கணவன் மற்றும் குடும்பத்தினர் தான் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் கணவன் குடும்பத்தார் வழக்கு தொடர்ந்த நிலையில் டிவி பார்க்கக்கூடாது கோவிலுக்கு தனியாக செல்லக்கூடாது என்பதெல்லாம் வன்கொடுமை வழக்கில் கீழ் வராது என்றனர். மேலும் வழக்கை தள்ளுபடி செய்து அவர்கள் குடும்பத்தினரை நீதிமன்றம் விடுதலை செய்தது.