
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி பாரத ஸ்டேட் வங்கியில் செந்தில்குமார்(46) என்பவர் இளநிலை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் தான் இதற்கு பணி மாறுதல் உத்தரவு வந்தது.
இந்த நிலையில் வங்கியில் தணிக்கை பணிகள் நடைபெற்றது. அப்போது செந்தில் குமார் விவசாய கடன் பிரிவில் பயனாளிகளுக்கு சேர வேண்டிய மானிய தொகையை அவர்களுக்கு கொடுக்காமல் தனக்கு தெரிந்தவர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்து அந்த பணத்தை கையாடல் செய்தது உறுதியானது.
சுமார் 7 லட்சத்து 99 ஆயிரத்து 146 ரூபாய் பணத்தை செந்தில்குமார் மோசடி செய்துள்ளார். அவர் மீது ஊட்டி நகர மத்திய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நேற்று செந்தில்குமாரை கைது செய்தனர்.