கோயம்புத்தூர் மாவட்டம் பீடம்பள்ளி தோட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு 2 முறை திருமணம் ஆகிவிட்டது. இருப்பினும் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

விவசாயியான ராஜேந்திரன் அயோத்தியா புரத்தைச் சேர்ந்த தனது நண்பர் செந்தில் என்பவருடன் இணைந்து பால் வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் செந்தில் கூறியதன் அடிப்படையில் ராஜேந்திரன் தனது மாட்டு கொட்டகையை ரம்யா என்ற பெண்ணுக்கு நாய்கள் வளர்க்க வாடகைக்கு கொடுத்தார். அங்கு ரம்யா 4 நாய்களை வளர்த்து வந்தார்.

சிலர் அந்த இடத்திற்கு ஆட்டோவில் வந்து சென்றதால் மாட்டு கொட்டகையை காலி செய்யுமாறு ராஜேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து ராஜேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு ரம்யாவை பார்க்க சிலர் வந்தனர். இதனால் ராஜேந்திரனுக்கும் ரம்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த ராஜேந்திரன் அரிவாளால் ரம்யாவை வெட்டி கொலை செய்துவிட்டு சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

உடனே போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று ரம்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.