சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி சமீபத்தில் மாட்டு கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என்று கூறினார். அவருடைய பேச்சு கடும் கண்டனத்திற்கு ஆளான நிலையில் ஒரு உயர்ந்த பதவியில் இருப்பவரை இப்படி அறிவியலுக்கு மாறான செய்திகளை கூறலாமா? என பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் அமைச்சர் பொன்முடி காமகோடி சொன்னது உண்மையாக இருந்தால் முதலில் அவரை மாட்டு கோமியத்தை குடிக்கட்டும் என்று கூறினார். இந்நிலையில் தற்போது காமகோடி மீண்டும் மாட்டு கோமியம் குடித்தால் நல்லது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது, கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. மாட்டு கோமியம் குடித்தால் 15 நிமிடத்தில் காய்ச்சல் குணமாகும். நாங்கள் பண்டிகையின் போது பஞ்சகவ்யம் சாப்பிடுவது வழக்கம். அந்த பஞ்சகவியத்தில் மாட்டு கோமியம் இருக்கிறது. பஞ்சகவியத்தில் மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இது தொடர்பாக சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் கோமியத்தை குடித்தால் உடல் நல பாதிப்பு ஏற்படும் என்று வெளிவந்துள்ள ஆராய்ச்சி பற்றி நான் இதுவரை படிக்கவில்லை என்று கூறினார்.