
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் விதமாக இலவச பஸ் பாஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் தங்களின் பள்ளிகள் மூலமாக இந்த பயண அட்டையை பெற்றுக்கொண்டு கல்வி ஆண்டு முழுவதும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.
தமிழகத்தில் கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் திறந்து 15 நாட்கள் கடந்துள்ளதால் அரசு பேருந்துகளில் பயணிக்க இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது. இதற்காக மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலி மற்றும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.