தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதற்காக 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு விழா சிறப்பான முறையில் நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதோடு இந்த நிகழ்ச்சியின் போது மாணவர்களின் கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டு போன்ற திறன்களை வெளிப்படுத்த வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதற்காக சுமார் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில்  மகேஷ் கூறியிருந்த நிலையில் தற்போது 14 கோடியே 60 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழாவினை சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.