
அரசுப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் whatsapp மூலம் தகவல் பெறும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் இன்று இன்டர்நெட்டில் பல தவறான செய்திகளை பெற்று கவனம் சிதறாமல் இருக்கவும், உண்மை செய்திகளை பல ஆக்கப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் பெரும் விதமாக பள்ளிக்கல்வித்துறை whatsapp சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது.
இதற்கு மேலும் ஒரு முக்கிய காரணமாக பிற தளங்களில் கல்வி குறித்து மாணவர்கள் தேடும்போது அவர்களுடைய டேட்டா திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பள்ளி படிப்பை முடித்தவுடன் தனியார் கல்வி நிறுவனங்கள் லீக் செய்யப்பட்ட டேட்டா மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு தங்கள் கல்லூரியில் சேர வலியுறுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே மாணவர்களின் தனிப்பட்ட டேட்டா தரவுகளை பாதுகாக்கும் நோக்கிலும் முழுக்க முழுக்க உண்மையான செய்திகளை இந்த சேனல் மூலம் பாதுகாப்பான முறையில் மாணவர்களால் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.