தமிழ்நாட்டில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான CEETA நுழைவுத் தேர்வு மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதேபோல MBA, MCA படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வு மார்ச் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.