
தேசிய அளவில் ஆன பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு என்பது இளங்கலை பாடங்களில் விரிவான புரிதலை முதன்மையாக சோதிக்கும் தேர்வு ஆகும். இந்த கேட் 2025 ஒரு கணினி அடிப்படையில் ஆன சோதனையாக இருக்கும். அதோடு இந்திய தொழில் நுட்ப நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
முதுகலை பொறியியல், முதுகலை தொழில்நுட்பம் மற்றும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மற்றும் தேசிய தொழில்நுட்ப கழகங்களில் நேரடி பி எஸ்டி சேர்க்கைக்கு நடத்தப்படும் இந்த தேர்வு வளர்ந்து வரும் பொது துறை நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி துறையில் நுழைவு வாயிலை திறக்கிறது.
கேட் 2025 என்பது அகில இந்திய தேர்வாகும். இதைத்தொடர்ந்து வரும் 2025 ஆம் ஆண்டுக்கான கேட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கு ஆகஸ்ட் 28ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தகவல் வெளியானது.
முதல்நிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான இந்த தேர்வு பிப்ரவரி 1,2 ,15,16 இல் பாடப்பிரிவு வாரியாக நடத்தப்பட உள்ளது.http://gate2025.iitr.ac.in என்ற இணையதளத்தின் மூலம் இந்த தேர்விற்கு செப்டம்பர் 26 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் மாணவர்கள் தாமதக்கட்டத்துடன் ஆகஸ்ட் 7ஆம் வரை விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.