சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், 2024 ஜூன் பத்தாம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதால் அதனை முன்னிட்டு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் 2023-24 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பயண அட்டையை பயன்படுத்திக் கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பேருந்துகளும் சரியாக இயங்குவதை கண்காணிக்க அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவர்களை பாதுகாப்பாக ஏற்றி இறக்கிச் செல்ல அனைத்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.