உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் ஒரு நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் இயக்குனராக ஆசிஷ் ஸ்ரீ வஸ்தவா என்பவர் இருக்கிறார். இவர் பயிற்சி மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது அந்த பயிற்சி மையத்தில் உயிரியல் ஆசிரியராக வேலை பார்க்கும் ஒருவர் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.

அதாவது அந்த மாணவியை கட்டிப்பிடித்து தகாத முறையில் தொட்டு அவர் மிகவும் மோசமான முறையில் நடந்துள்ளார். அதோடு மாணவிக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தல் மற்றும் வகுப்பு நேரத்தில் கழிவறைக்கு அழைத்து செல்லுதல் போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பயிற்சி ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து ஆசிரியரை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.