தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் ஜூலை 31ம் தேதி இன்றுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தாங்கள் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்வி சான்றிதழ்களுடன் நேரில் சென்று சேர்ந்து பயிலலாம்.

மேலும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக மாதம் 750 ரூபாய் மற்றும் விலையில்லா மிதிவண்டி சீருடை உள்ளிட்டவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள மாணவர்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம்.