
தமிழகத்தில் திருக்கோவில்கள் சார்பாக நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை மற்றும் தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டணம் இல்லாமல் பயற்சியும் ஊக்கத்தொகையாக மாதம் தோறும் 3000 ரூபாய் மற்றும் தகுதி நேரத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர 13 முதல் 24 வயது குள்ளும், ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர 13 முதல் 20 வயதிற்குள்ளும், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளியில் சேர 13 முதல் 16 வயதிற்குள்ளும், எட்டாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கை காண படிவங்களை அந்தந்த திருக்கோவில்களின் அலுவலகத்தில் நேரில் அல்லது அந்தந்த திருக்கோவில்களின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.