மத்தியபிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ்  வெற்றி பெற்றால் ரூ.500-க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

அதில், ரூ.500-க்கு கேஸ் சிலிண்டர், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உரிமைத்தொகை, 100 யூனிட் இலவச மின்சாரம், மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் பல திட்டங்களை மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.