மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1161 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆண்களுக்கு 945 காலி பணியிடங்களும். பெண்களுக்கு 103 காலிப்பணியிடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு 113 காலி பணியிடங்களும் உள்ளது.

பணியிடங்கள்:

சமையல் காரர் – 444
செருப்புத் தொழிலாளி – 8
தையல்காரர் – 21
பார்பர் – 180
சலவை செய்பவர் – 236
தூய்மை பணியாளர் – 137
பெயிண்டர் – 2
கார்பெண்டர் – 8
எலெக்ட்ரிஷசன் – 4
மாலி – 4
வெல்டர் – 1
சார்ஜ் மெக்கானிக் – 1
எம்பி உதவியாளர் – 2

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 18 முன்னாள் ராணுவத்திற்கு அரசு விதிமுறைகளின் படி தளர்வும் உண்டு.

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொழில் பிரிவில் தொழிற்கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

சம்பள விபரம்: 21,700 முதல் 69,100 வரை.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி தேர்வு , உடற்பயிற்சி தேர்வு, உடல் திறன் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப பதிவு மார்ச் முதல் வாரம் தொடங்குகிறது.