
உத்திரபிரதேச மாநிலத்தில் மேயர்,நகர்ப்புற பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் கடந்த மே 4ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
இதனால் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வன்முறைகளை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுக்கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இன்று மதுக்கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.