
கர்நாடகா மாநிலம் முழுவதும் அரசியல் மாநாடு, ஊர்வலம் மற்றும் திருமணம் ஆகிய நிகழ்வுகளில் பட்டாசு வெடிக்க தடைவிதித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையின் போது பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அனுமதி என கூறியுள்ள கர்நாடகா அரசு அதனை மீறி விற்பனை செய்பவர்களின் கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் 14 பேர் பலியானதால் இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.